Wednesday, January 24, 2018

பவள விழா காணும் சித்தப்பா ...................

பவள விழா காணும் சித்தப்பா ................... 
 
பிறந்த நாள் வாழ்த்து  
 ----------------------------------------  
அன்புக்கு அழகான சித்தப்பாவே !   நீவிர் 
மாசிலாமணியின் கார்மேகக் கருவாகி 
காசியம்மாவின் கருவறையில் உருவாகி 
மாண்புமிக்க மகனாய் பிறந்திட்டீர் 
மனிதரில் மாணிக்கம் தான் நீவிர் ----------------------வாழ்க வளமுடன்.
 
அன்பெனும் சோலையில் வலம்வருவீர் என்பதால் 
அன்பழகன் என்று பெயரிட்டனரோ !
அவர்களையும் வணங்குகிறோம் !
 
திக்கெட்டும் உன்புகழ் நிலைத்து நிற்க 
திலகவதியாரை கைபிடித்தீரோ !
செந்தமிழை வாழவைக்க சிங்கராச் 
சென்னையைவிட்டு சிங்கை சென்றீரோ !  ----------வாழ்க வளமுடன்.
 
திரைகடல் கடந்து சென்றும் ஓய்வில்லாது 
பைந்தமிழ் செழிக்க படைப்புகள் பல படைத்தீரோ !
எத்திசை சென்றாலும் எல்லோர் மனதிலும் 
நீங்கா இடம்பிடித்தது உமது சமூக சேவையோ ! ---- வாழ்க வளமுடன்.
 
முகத்தின் இருகண்கள் போல நீங்கள் 
ஈன்றெடுத்த இரு செல்வதேவங்களோடும்  
இன்பத்தை அள்ளித்தரும் இனிய இன்பாவோடும் 
சுற்றத்தோடும் ,  நட்போடும்   , பூரணநலத்தோடும் 
என்றென்றும்  பல்லாண்டு வாழ்க வளமுடன்..
வாழ்த்த வயதில்லை  வணங்கி நிற்கும் ------------------வாழ்க வளமுடன்.                                    
                           
                                         வளர்பிறை குமாரசாமி குடும்பத்தினர் , சென்னை 








                                       
 

பவள

பவள 

Tuesday, January 23, 2018